search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி ஆணை  முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
    X

    அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கிய காட்சி. அருகில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உள்ளார்.

    அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி ஆணை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

    • புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் பல ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் அங்கன்வாடி ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
    • இதற்கான பணி ஆணையை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் பல ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் அங்கன்வாடி ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இது சம்பந்தமாக துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் மதிப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வருகிற 27 அங்கன்வாடி ஊழியர்கள், 23 அங்கன்வாடி உதவியாளர்கள் என 50 ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

    பணிநிரந்தரம் செய்யப் பட்ட 27 அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் ஒரு மாதத்திற்கு ரூ.6 லட்சத்து 21 ஆயிரமும், 23 உதவியாளர்களுக்கு ஊதியம் ஒரு மாதத்திற்கு ரூ.5 லட்சத்து 11 ஆயிரமும் மொத்தம் ஒரு மாதத்திற்கு ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் சம்பளம் வழங்கப்படவுள்ளது.

    இதற்கான பணி ஆணையை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். பணி ஆணையை பெற்றுக் கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோரின் காலில் விழுந்து ஆணையை பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×