என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    50 சதவீத அரசு இடங்களை பெற்றுதர கவர்னர் தயங்குவது ஏன்?
    X

    கோப்பு படம்.

    50 சதவீத அரசு இடங்களை பெற்றுதர கவர்னர் தயங்குவது ஏன்?

    • அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கேள்வி
    • மாணவர்கள் மற்றும் பொது மக்களை திரட்டி அ.தி.மு.க. போராட்டத்தில் ஈடுபடும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தனியார் மருத்துவ கல்லூரி களில் 50 சதவீத இடங்களை அரசின் இட ஒதுக்கீடாக பெற வேண்டும் என மத்திய அரசின் சட்டம் இருந்தும் புதுவை அரசு ஆண்டுதோறும் 36 சதவீத இடங்களில் மட்டும் அரசின் இட ஒதுக்கீடாக பெறுகிறது.

    இதனால் ஆண்டுதோறும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த 60 மாணவர்களின் மருத்துவக் கல்வி தனியாருக்கு தாரை வார்க்க ப்படுகிறது.

    தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள மொத்தம் 450 இடங்களில் சட்டப்படி பெற வேண்டிய 225 இடங்களுக்கு பதிலாக 165 இடங்கள் பெறுவதால் மீதமுள்ள 60 மருத்துவ இடங்கள் ரூ.60 கோடிக்கு தனியார் மருத்துவ கல்லூரி களால் விற்கப்படுகிறது.

    டாக்டரான கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த பிரச்சனையில் ஏன் நியாயமான முடிவை எடுக்க தயங்குகிறார்? மேலும், இந்த ஆண்டு 50 சதவீத இடங்களை பெறவில்லை என்றால், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி பெற்று, மாணவர்கள் மற்றும் பொது மக்களை திரட்டி அ.தி.மு.க. போராட்டத்தில் ஈடுபடும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    Next Story
    ×