என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்- அமைச்சர்  சாய். ஜெ.சரவணன் குமார் திறந்து வைத்தார்
    X

    குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை புதுப்பித்து அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த காட்சி.

    குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்- அமைச்சர் சாய். ஜெ.சரவணன் குமார் திறந்து வைத்தார்

    • ஊசுடு தொகுதிக்குட்பட்ட துத்திப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியில் அமைந் துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயலற்ற தன்மையில் இருந்து வந்தது.
    • அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமாரின் நடவடிக்கையால் குடிநீர் நீர் தேக்க தொட்டி அருகில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் புதியதாக அமைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதிக்குட்பட்ட துத்திப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியில் அமைந் துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயலற்ற தன்மையில் இருந்து வந்தது.

    இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஊர் மக்கள் அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமாரிடம் மனு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து, அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமாரின் நடவடிக்கையால் குடிநீர் நீர் தேக்க தொட்டி அருகில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் புதியதாக அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது.

    இதில் அமைச்சர் சாய். ஜெ.சரவணன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் வெங்கடேசன், வில்லியனூர் கொம்யூன் பஞ் சாயத்து இளநிலை பொறியாளர் கருத்தையன், பா.ஜனதா தொகுதி தலைவர் தியாகராஜன், கிளை தலைவர் தமிழரசன், தொகுதி செயற்குழு உறுப்பினர் கனகு, தொகுதி குடிநீர் பொறுப்பாளர் பாலு மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×