search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு  முகாம்
    X

    கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற காட்சி.

    கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

    • தாசில்தாரும் துணை வாக்காளர் பதிவு அதிகாரியுமான கோபால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
    • வாக்காளர் அடையாள அட்டைக்கு ஹெல்ப் லைன் அலைபேசி செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மணப்பட்டு கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் புதுச்சேரி அரசின் தேர்தல் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

    உதவி பேராசிரியரும் நோடல் அலுவலருமான பாரதி வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் மஞ்சுளா தலைமை உரையாற்றினார்.

    பாகூர் தாசில்தாரும் துணை வாக்காளர் பதிவு அதிகாரியுமான கோபால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். சிறப்பு வாக்காளர் பதிவு அதிகாரி வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார் . முகாமில் 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்கள் எவ்வாறு வாக்காளர் அடையாள அட்டைக்கு ஹெல்ப் லைன் அலைபேசி செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும் மாணவிகளின், கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    முகாம் நிறைவில் துணை முதல்வர் மஞ்சுளா நன்றி கூறினார்.

    Next Story
    ×