என் மலர்
புதுச்சேரி

உழவர்கரை தொகுதியில் ஊனமுற்றோருக்கு வேட்டி-சேலைகளை அ.ம.மு.க. வடக்கு மாநில இணைச் செயலாளர் லாவண்யா வழங்கிய காட்சி. அருகில் அ.ம.மு.க. மாநில செயலாளர்கள் எஸ்.டி.சேகர், யூ.சி.ஆறுமுகம் உள்ளனர்.
உழவர்கரை தொகுதியில் ஊனமுற்றோருக்கு வேட்டி-சேலை
- அ.ம.மு.க. சார்பில் வழங்கப்பட்டது
- சிறப்பு அழைப்பாளர்களாக அ.ம.மு.க. வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர், தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று இதனை வழங்கி னர்.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை உற்சாகமாக கொண்டா டப்படுகிறது.
இதையொட்டி பல்வேறு தரப்பினரும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகி றார்கள். அரசியல் தலை வர்கள், அரசியல் பிரமு கர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் பட்டாசு, இனிப்பு களை வழங்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதேபோல் உழவர்கரை தொகுதியை சேர்ந்த நலிவுற்ற 50-க்கும் மேற்பட்ட ஊனமுற்றோர்க ளுக்கு அ.ம.மு.க. வடக்கு மாநில இணைச் செயலாளர் லாவண்யா ஏற்பாட்டில் வேட்டி-சேலை, இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அ.ம.மு.க. வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர், தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று இதனை வழங்கி னர்.
இதில் தொகுதி செயலா ளர்கள் தட்டாஞ்சாவடி ராமச்சந்திரன், உழவர்கரை கலியமூர்த்தி, கதிர்காமம் சிவக்குமார், மாணவரணி செயலாளர் ஜெகதீஷ், பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா, மூர்த்தி மற்றும் உழவர்கரை தொகுதி அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






