என் மலர்
புதுச்சேரி

புதுவை வீரர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சீருடை - உபகரணம் வழங்கிய காட்சி.
புதுவை வீரர்களுக்கு சீருடை - உபகரணம்
- அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
- சென்னையில் வருகிற 17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.
புதுச்சேரி:
37-வது தேசிய சீனியர் ஆடவர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி சென்னையில் வருகிற 17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.
போட்டியில் பங்கேற்கும் புதுவை ஹாக்கி அணியினர் அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஆசி பெற்றனர்.
வீரர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வாழ்த்தி வழி அனுப்பினார். நிகழ்ச்சியின் போது புதுச்சேரி ஹாக்கி சங்கத்தின் தலைவர் குமரேசன், செயலாளர் அன்பழகன், அசோசியேட் செயலாளர்கள் பழனி, செந்தில்குமார், இணை செயலாளர் அரவிந்தன், பயிற்சியாளர் தயாளன் மற்றும் மூத்த விளையாட்டு வீரர்கள் உடன் இருந்தனர்.
Next Story






