என் மலர்
புதுச்சேரி

கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்யாணசுந்தரம் எம்.எல்.எ. கோப்பை வழங்கிய காட்சி.
கணபதி செட்டிகுளம் அணிக்கு கோப்பை-கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்
- கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டியில் காலாப்பட்டு முழுவதும் இருந்து 12 அணிகள் பங்கு பெற்றன.
- பெரிய காலாப்பட்டு அணி 2-ம் இடத்தையும், கணபதி செட்டி குளம் அணியினர் முதல் இடத்தையும் பிடித்தனர்.
புதுச்சேரி:
காலாப்பட்டு தொகுதி கைப்பந்து வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதலாமாண்டு காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டியில் காலாப்பட்டு முழுவதும் இருந்து 12 அணிகள் பங்கு பெற்றன. அனைத்து ஆட்டங்களும் லீக் முறையில் நடத்தப்பட்டது. ஆலங்குப்பம் அன்னை நகர் அணி, ஆலங்குப்பம் வாரியர்ஸ் அணி, பெரிய காலாப்பட்டு அணி, கணபதி செட்டிக் குளம் ஏ அணி ஆகியவை சூப்பர் லீக் தகுதி பெற்றன.
விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் ஆலங்குப்பம் அன்னை நகர் அணி 4-ம் இடத்தையும், ஆலங்குப்பம் வாரியர்ஸ் அணி 3-ம் இடத்தையும், பெரிய காலாப்பட்டு அணி 2-ம் இடத்தையும், கணபதி செட்டி குளம் அணியினர் முதல் இடத்தையும் பிடித்தனர்.
வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. பாராட்டி, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை அனைத்து விளையாட்டு வீரர்க ளுக்கும் வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் பிரகாஷ், மொய்தீன், ஸ்பைடர் விளையாட்டு கழக பொறுப்பாளர்கள் விஜய சாரதி, அழகேசன், ரவிச்சந்திரன், முருகன், பன்னீர் செல்வம், கவுதமன் ஆகியோர் செய்திருந்தனர்.






