என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    லாரிகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல்
    X

    திருவண்டார்கோவில் திருபுவனை பாளையம் செல்லும் சாலையில் தனியார் கம்பெனிக்கு வந்த லாரிகள் அணிவகுத்து நின்ற காட்சி.

    லாரிகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல்

    • திருபுவனை பாளையம் பகுதியில் அதிகப்படியான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
    • அந்த சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    புதுச்சேரி:

    திருபுவனை பாளையம் பகுதியில் அதிகப்படியான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள தனியார் கம்பெனிகளுக்கு ஒரு சில லாரிகள் மூலப்பொருட்களை ஏற்றி வருவது, அதன் பின்னர் அங்குள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை ஏற்றி செல்வது நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில் அங்கு இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைக்கு தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலம் இருந்து மூலப் பொருட்களை மூட்டையில் ஏற்றி வரும் லாரிகள் அங்குள்ள குறுகிய சாலைப் பகுதியில் நிறுத்தி விடுகின்றனர். மேலும் அந்த லாரிகள் பல நாட்கள்அணிவகுத்து நிற்கின்றன.

    இதனால் அந்த சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    இதனை பல்வேறு முறை காவல்துறை அதிகாரிகளும், உள்ளூர் இளைஞர்களும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும், புகார் தெரிவித்தும் தொழிற்சாலை நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.

    எனவே போக்குவரத்து நெரிசலுக்கு தொழிற்சாலை பகுதியினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இந்த சாலையில் நிற்கின்ற லாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×