என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
சாலை பணியின் தரத்தை கண்காணிக்க வேண்டும்
- கொம்பாக்கம் வழியாக வில்லியனூர் செல்லும் சாலை பணியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- சாலையின் தரத்தை உறுதிப்படுத்தும்படியும், தேவையற்ற இடங்களில் வேகத்தடை அமைக்காமல் இருக்கும்படியும் வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை - கடலூர் சாலை முருங்கப்பாக்கம் சந்திப்பில் இருந்து கொம்பாக்கம் வழியாக வில்லியனூர் செல்லும் சாலை பணியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் ஒதியம்பட்டு பகுதியில் நடைபெறும் சாலை பணியை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது உடன் வந்த அதிகாரிகளிடம் பணிகளை கண்காணித்து நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் சாலை பணியை முடிக்கும்படியும், சாலையின் தரத்தை உறுதிப்படுத்தும்படியும், தேவையற்ற இடங்களில் வேகத்தடை அமைக்காமல் இருக்கும்படியும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜெயராமன், மனோகர், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் மூர்த்தி, தொகுதி துணை செயலாளர் குணேசகரன், மாநில ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, இளைஞரணி தொகுதி செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.