search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மொழி குறித்த போராட்டம் தேவையற்றது
    X

    கோப்பு படம்.

    மொழி குறித்த போராட்டம் தேவையற்றது

    • பிரதமர் நரேந்திர மோடி தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளை நேரில் பார்வையிட உத்தரவிட்டுள்ளார்.
    • பல இடங்களில் வீடுகள் இருந்தாலும் கழிவறைகள் இல்லை. மனைப்பட்டா பல கிராமங்களில் இதுவரை வழங்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளை நேரில் பார்வையிட உத்தரவிட்டுள்ளார், அதன் அடிப்படையில் கடந்த 1 மாத காலமாக 50 தலித் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம்.

    இந்த கிராமங்கள் அனைத்தும் 50 ஆண்டுக்கு முன் இருந்த நிலையிலேயே இப்போதும் உள்ளது. காங். ஆட்சி காலத்தில் அவர்களை வஞ்சித்துள்ளனர், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிதியில் முறை–கேடுகள் நடைபெற்றுள்ளது.

    பல இடங்களில் வீடுகள் இருந்தாலும் கழிவறைகள் இல்லை. மனைப்பட்டா பல கிராமங்களில் இதுவரை வழங்கவில்லை. குடிநீர் சாலை மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.

    அவர்களது நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்காக ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஒதுக்கப்பட்ட மேம்பாட்டு நிதியில் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக 2016 லிருந்து 2021 வரை கடந்த காங்- தி.மு.க. ஆட்சியில் சிறப்பு கூறு நிதியை செலவிட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அம்மக்களுக்கு சமூக அநீதி நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல்வேறு கட்சிகள் இணைந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.

    சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் முஸ்லிம் லீக் கட்சி பங்கேற்றது. எங்குமே மதக் கலவரம், சாதி கலவரம் இல்லாத நிலையில் இதுபோன்ற செயல்களில் எதிர்கட்சிகள் ஈடுபடுகின்றனர், இந்தியை திணிப்பது பா.ஜனதா கொள்கை அல்ல. நான் இந்தி தெரியாதவன் தான். ஆனால் நீண்ட காலமாக பா.ஜனதா மாநில தலைவராக உள்ளேன். பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் வடமாநிலங்களில் இருந்து வந்து அரசியல் செய்யவில்லை.

    இதனால் மொழி குறித்து நடத்தப்படும் போராட்டம் தேவையற்றது. தி.மு.க. வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகூடங்களில் இந்தி இல்லையா? மோடி இந்தியை தாய் மொழியாக கொண்டவர் அல்ல, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நிலத்தடி நீரை உறிஞ்சும் புதிய மதுபான ஆலைகள் வரக்கூடாது என்பதுதான் பா.ஜனதா கொள்கை, அதனை பா.ஜனதா எதிர்க்கும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×