என் மலர்
புதுச்சேரி

கைது செய்யப்பட்ட சத்யா
பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது
- நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் தலைமறைவான ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
- இதற்கிடையே ஜெயிலில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த சத்யா அதன் பிறகு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானார்.
புதுச்சேரி:
நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் தலைமறைவான ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
புதுவை ரோடியார் பேட் அங்குநாயக்கன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. (வயது 30). இவர் புதுவை சங்கரதாஸ் வீதியில் ஒரு கட்டிடத்தின் மாடியில் அழகு நிலையத்துடன் ஸ்பா நடத்தி வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த அழகு நிலையத்துக்குள் புகுந்து ஒரு கும்பல் கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்றது.
இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடியான ரெயின்போ நகரை சேர்ந்த சத்யா (27) உள்பட 7 பேரை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே ஜெயிலில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த சத்யா அதன் பிறகு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானார். இதனால் அவரது நிபந்தனை ஜாமீனை கோர்ட்டு ரத்து செய்தது.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி சத்யா ரெயின்போ நகர் பகுதியில் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யாவை தேடிவந்தனர். தலைமறைவாக இருந்து வந்த சத்யாவை பெரிய கடை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைந்தனர்.






