search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    20-ம் ஆண்டு மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X

    அய்யப்பன் கோவிலில் கொடியேற்றம் நடந்த காட்சி.

    20-ம் ஆண்டு மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    • 30-ந் தேதி நாளை காலை அனைத்து சாமிகளுக்கும் விசேஷ அபிஷேக ஆராதனையும் செய்து, மகா தீபாராதனையும் காண்பிக்கப்படுகிறது.
    • அரியாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இருந்து 108 நெய் தேங்காய் மற்றும் பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் பகுதியில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 20-ம் ஆண்டு மகோற்ச்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. அதனை முன்னிட்டு கன்னிமூல கணபதி, மஞ்சள் மாதா, அய்யப்பன், பெரிய கருப்பண்ணசாமி, சிறிய கருப்பண்ணசாமி, கருப்பாயி அம்மன் ஆகிய சாமிகளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தி காலை 10 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கர்

    எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 30-ந் தேதி நாளை காலை அனைத்து சாமிகளுக்கும் விசேஷ அபிஷேக ஆராதனையும் செய்து, மகா தீபாராதனையும் காண்பிக்கப்படுகிறது.

    வருகின்ற 1 -ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் அய்யப்பன் சாமி விசேஷ அலங்காரத்தில் வீதி உலா நடைபெறுகிறது. 2 -ந்தேதி காலை 7 மணிஅளவில் நோணாங்குப்பம் சங்கராபரணி ஆற்றில் அய்யப்பன் சாமிக்கு ஆராட்டு நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகின்ற 3-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் அரியாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இருந்து 108 நெய் தேங்காய் மற்றும் பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் அய்யப்பன் சாமி மூலவருக்கு பால் அபிஷேகமும் நெய் அபிஷேகமும் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாரதனை காண்பிக்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யப்பன் திருக்கோவில் அறங்காவல் குழுவினர், அய்யப்ப சேவா சங்கம் மற்றும் அய்யப்பன் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×