search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விரைவில் வழங்கப்படும் -  கவர்னர் தமிழிசை உறுதி
    X

    கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

    மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விரைவில் வழங்கப்படும் - கவர்னர் தமிழிசை உறுதி

    • புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசு பள்ளியை ஊக்குவிக்கும் விதமாக பார்வையிட்டு வருகிறார்.
    • அங்கும் மாணவர்கள் சார்பாக பல்வேறு வரவேற்புகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்திக் காட்டினார்.

    புதுச்சேரி:

    75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை யொட்டி புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசு பள்ளியை ஊக்குவிக்கும் விதமாக பார்வையிட்டு வருகிறார்.

    அதன்படி ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியை பார்வையிட சென்றார். கவர்னருக்கு தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி காந்தன் சால்வை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து அப்பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு அலங்காரத்தில் நடன நிகழ்ச்சி நடத்தி பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் விதமாக கவர்னரை வரவேற்றனர்.

    மேலும் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பள்ளி சிறுவர்களுடன் கலந்துரை யாடலில் ஈடுபட்டார். பள்ளியில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்‌. மாணவர்க ளின் வரவேற்பிலும், கலை நிகழ்ச்சிகளும் கவர்னர் உற்சாகமடைந்தார்.

    தொடர்ந்து அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி, நரம்பை, பிள்ளை யார்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியையும் பார்வையிட்டார். அங்கும் மாணவர்கள் சார்பாக பல்வேறு வரவேற்புகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்திக் காட்டினார். தொடர்ந்து அப்பள்ளி யிலும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விடுபட்ட மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை விரைந்து கொடுக்கவும், சீருடை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். மாணவர் சிறப்பு பேருந்தை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அங்கு இருந்த ரொட்டி பால் வழங்கும் ஊழியர்கள் தங்களுக்கு சம்பளம் உயர்த்தி தருவதாக அரசு தெரிவித்தது. ஆனால் இதுவரை வழங்கப்பட வில்லை உடனடியாக வழங்க ஆணையிடுமாறு கவர்னரிடம் கேட்டுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள், பள்ளி துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×