என் மலர்
புதுச்சேரி

பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
தொழில்நுட்ப ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- புதுவை பொதுப்பணித் துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தினர் பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார்
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித் துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தினர் பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வீராசாமி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் ஞானசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
காலியாக உள்ள மெக்கா னிக், ஒர்க் இன்ஸ்பெக்டர், சீனியர் மெக்கானிக், போர்மென், ஓவர்சியர் பதவிகளை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
Next Story






