search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆசிரியர்கள் சொந்த பிராந்திய கிராம பள்ளிக்கு மாற்றம்
    X

    சம்பள உயர்வு பெற்ற மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

    ஆசிரியர்கள் சொந்த பிராந்திய கிராம பள்ளிக்கு மாற்றம்

    • பணியிட மாறுதலுக்கு வழிகாட்டுதல் வெளியீடு
    • 57 வயது நிரம்பியவர்களுக்கு கிராமப்புற பணியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவையில் 2019-ம் ஆண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    அவர்களுக்கு கடந்த டிசம்பரில் இடமாற்றம் வழங்கப்பட்டது. இதற்கு பல ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை ஆணை பெற்றன. புதிய ஆசிரியர் பணியிட கொள்கை உருவாக்க கோர்ட்டு உத்தரவிட்டது. புள்ளிகள் அடிப்படையில் வெளியிடப்பட்ட பணி மாறுதல் கொள்கைக்கும் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

    பணியிட மாறுதல் கிடைக்கும் என எதிர்பார்த்த காரைக்கால் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து புதுவை பள்ளி கல்வித்துறை 2023-24ம் ஆண்டுக்கான ஆசிரியர் பணியிட மாற்றத்துக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து கல்வித்துறை துணை இயக்குனர் வெர்பினா ஜெயராஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை கல்வித்துறை புதிய இடமாறுதல் கொள்கையை மாற்றியமைக்கும் வரை இடைநிறுத்த ஏற்பாடாக வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகிறது. பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஒரே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றக்கூடாது. வெளிபிராந்தியத்தில் 2 ஆண்டுகள் பணி முடித்த பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் சொந்த பிராந்தியத்துக்கு அழைத்து வரப்பட்டு, கிராமப்புற பள்ளிகளில் பணியமர்த்தப்படுவர்.

    மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், புற்றுநோய், நரம்பியல் அறுவை சிசிச்சை உட்பட நோய்களால் அவதிப்படுவர்களுக்கு பணியிட மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். 55 வயதுக்கு மேற்பட்ட தலைமை ஆசிரியருக்கு பணியிட மாறுதலில் இருந்தும், 57 வயது நிரம்பியவர்களுக்கு கிராமப்புற பணியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.

    முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர் நிலை 1, 2 போன்ற உயர் பதவிகளுக்கு வயது தளர்வு பொருந்தாது. பள்ளிக்கல்வி இயக்குனருக்கு கோரிக்கைகளை நிராகரிக்க உரிமை உள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×