search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சிறுமி மாயமானது முதல் பிணமாக மீட்கப்பட்டது வரை... 4 நாள் நடந்த திக்... திக்... நிமிடங்கள்
    X

    சிறுமி மாயமானது முதல் பிணமாக மீட்கப்பட்டது வரை... 4 நாள் நடந்த திக்... திக்... நிமிடங்கள்

    • சந்தேகத்தின் பேரில் பிடித்தவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்யாமல் மேலோட்டமாக விசாரித்துள்ளனர்.
    • அலட்சியமாக செயல்பட்டதால் சிறுமியை உயிருடன் மீட்க முடியாமல் பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த சிறுமி 2-ந்தேதி மதியம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் திடீரென சிறுமி மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    சிறுமி மாயமான தினத்தன்று மாலையே சோலை நகர் மற்றும் முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் முதலில் அலட்சியமாக விசாரணையை தொடங்கியதாக கூறப்படுகிறது. 2-வது நாளில் சிறுமியின் வீட்டை சுற்றியே தேடினர். மறுநாள் மோப்ப நாய் வரவழைத்து தேடும் பணிநடந்தது. மோப்பநாய் சிறுமியின் வீட்டில் இருந்து சிறிது துாரம் சென்று நின்று விட்டது.

    சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சிறுமி கண்ணதாசன் வீதியில் நடந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்துள்ள வீட்டில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகள் தானாக அழிந்துவிட்டது.

    அழிந்துவிட்டதாக கூறப்பட்ட சி.சி.டி.வி.யின் ஹார்டு டிஸ்க் அழிக்கப்பட்ட மூலம் காட்சிகளை மீண்டும் ரெக்கவரி செய்து பார்த்திருந்தால் அன்றே கொலை குற்றவாளிகளை கைது செய்திருக்கலாம். ஆனால் அதில் போலீசார் கோட்டை விட்டதாக கூறப்படுகிறது.

    அதுபோல் சந்தேகத்தின் பேரில் பிடித்தவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்யாமல் மேலோட்டமாக விசாரித்துள்ளனர்.

    இதனால் உண்மை வெளியே தெரியவில்லை. அதில் காலதாமதம் ஏற்பட்டது. சிறுமி மாயமான இடத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்திற்கு அப்பால் உள்ள சி.சி.டி.வி.க்களில் சிறுமி குறித்து எதுவும் பதிவாகவில்லை என்பதால் சிறுமி வெளியே செல்லவில்லை என்பதை உறுதி செய்தனர்.

    3-வது நாள் சிறுமி இறந்திருக்கலாம் என கருதிய போலீசார், அங்குள்ள செப் டிக் டேங்க், குடிநீர் தொட்டி, பிரிட்ஜ்களில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். அப்போதும் சிறுமியை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    4-வது நாள் மதியம் 2 மணியளவில் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் உடல் அழுகிய நிலையில், கழிவுநீர் கால்வாயில் இருந்து சிறுமியின் உடல் கட்டப்பட்ட மூட்டை வெளியே வந்தது. துர்நாற்றம் காரணமாக சிறுமி உடல் மிதப்பது வெளியே தெரிந்தது. அதன் பிறகே போலீசார் உடலை கண்டுபிடித்தனர். சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட தகவலும் வெளியானது.

    இவை அனைத்தும் சிறுமி மாயமான வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்திலே நடந்து முடிந்து விட்டது.

    சிறுமி மாயமான 2-ந்தேதி மதியம் முதல் 5-ந்தேதி வரை 4-வது நாளில் சிறுமியை பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது.

    சிறுமி மாயமான அன்றே அப்பகுதியில் யார் கஞ்சா பழக்கம் உள்ளவர்கள். யார்? யார்? சிறுமியிடம் நெருங்கி பழகுபவர்கள் என விசாரணையை தொடங்கி இருந்தால் சிறுமியை முதல் நாளிலே கண்டு பிடித்திருக்கலாம்.

    அலட்சியமாக செயல்பட்டதால் சிறுமியை உயிருடன் மீட்க முடியாமல் பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது.

    கொலை நடந்த பகுதி மக்கள் நடமாட்டம் மிக்க பகுதி. அருகருகே வீடுகள் உள்ளது. எப்போதும் சாலையில் மக்கள் அமர்ந்திருப்பர். இந்த பகுதியிலேயே துப்பு துலக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக செயல்பட்டதை காட்டுகிறது.

    கொலையாளிகளும் சிறுமி மாயமான நாள் முதல் சகஜமாக வெளியில் நடமாடியுள்ளனர்.

    Next Story
    ×