என் மலர்
புதுச்சேரி

கொம்பாக்கம் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைகளை திருடி வெளியில் அடகு வைத்த வங்கி அதிகாரி கைது
- நகைகள் சில காணாமல் போயிருந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- வெளியில் அடகு வைத்திருக்கும் நகைகளை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை கொம்பாக்கம் பகுதியில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.
இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன்களை பெற்றுள்ளனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அந்த வங்கியில் வைக்கப்பட்டிருந்த நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.
அப்போது நகைகள் சில காணாமல் போயிருந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கூட்டுறவு கடன் சங்க பொறுப்பாளர் கதிரவன் (48) என்பவர் நகைகளை திருடி தனது நண்பர் மூலம் வெளியில் அடகு வைத்து ரூ.33 லட்சத்திற்கு மேல் பணம் பெற்றது தெரிய வந்தது. இதனையடுத்து கதிரவனை போலீசார் கைது செய்தனர்.
அவர் வெளியில் அடகு வைத்திருக்கும் நகைகளை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story






