என் மலர்
புதுச்சேரி

வண்ணப்பொடிகளை கொண்டு உருவாக்கப்பட்ட காந்தியின் உருவப்படம்.
எஸ்.எம்.வி.பள்ளியில் வண்ணப்பொடிகளை கொண்டு காந்தியின் உருவப்படத்தை வரைந்த மாணவர்கள்
- பிரம்மாண்டமான முறையில் வண்ணப் பொடிகள் கொண்டு மாணவர்களால் காந்தியின் உருவப்படம் வரையப்பட்டி ருந்தது.
- முதல்வருமான வெங்கடாஜலபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் எஸ்.எம். வி. பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் தக்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்ட ளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாஜலபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் எஸ்.எம். வி. பள்ளியின் முதல்வர் அனிதா சாந்தகுமார் வரவேற்றார்.
மேலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்திற்கு அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.விழாவின் சிறப்பு அடையாளமாக காந்தியின் நினைவைப் போற்றும் வகையில் பள்ளியின் இறை வழிபாட்டுக் கூடத்தின் தரைப் பகுதியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் வண்ணப் பொடிகள் கொண்டு மாணவர்களால் காந்தியின் உருவப்படம் வரையப்பட்டி ருந்தது.
நிகழ்ச்சியில் துணை முதல்வர், நிர்வாக அலுவலர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.






