என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
குடிநீர் விநியோகம் நிறுத்தம்
- கிருஷ்ணாநகர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி
- குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பொது சுகாதார கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி குடிநீர் உட்கோட்ட வடக்கு பிரிவுக்குட்பட்ட கிருஷ்ணாநகர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கிருஷ்ணாநகர் முழுவதும், சூரியகாந்தி நகர், வசந்த நகர், செந்தாமரைநகர், தேவகிநகர், சங்கரதாஸ் சுவாமிகள்நகர், எழில்நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






