என் மலர்
புதுச்சேரி

புள்ளியியல் துறை ஊழியர்கள் கடற்கரையில் துப்புரவு முகாம் நடைபெற்ற காட்சி.
புள்ளியியல் துறை ஊழியர்கள் கடற்கரையில் துப்புரவு முகாம்
- 15 நாள்துாய்மை பணி திட்டம் ஜூலை 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கொண் டாடப்படுகிறது.
- கருங்கல் குவியல்களுக்கு குவிந்து கிடந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
புதுச்சேரி:
மத்திய அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி மற்றும் கட லுார் தேசிய புள்ளியியல் அலுவலகம் துணை மண்டலங்கள் சார்பில், 15 நாள்துாய்மை பணி திட்டம் ஜூலை 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
அதனையொட்டி புதுச் சேரி கடற்கரையில் சிறப்பு துப்புரவு முகாம் நடந்தது.
முகாமை புதுச்சேரி துணை மண்டல உதவி இயக்குநர் முத்துச்சாமி தொடங்கி வைத்து, தூய்மை இந்தியா திட்டத்தின் சிறப்புகள் குறித்து கலந்துரையாடினார்.
தொடர்ந்து கடற்கரையில் கருங்கல் குவியல்களுக்கு குவிந்து கிடந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
முகாமில் புதுச்சேரி, கடலுார் தேசிய புள்ளியியல் அலுவலக துணை மண்டல ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






