search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும்
    X

    விளையாட்டு வீரர்கள் நலச்சங்க கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும்

    • விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • புதுவை அரசு இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காததை கண்டிப்பது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் கூட்டம் சங்க தலைவர் வளவன் தலைமையில் நடந்தது. சதீஷ் வரவேற்றார். நிர்வாகிகள் ராஜ், வீரபா ரதி, சந்துரு, அசோக், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு:-

    புதுவையில் அழிவுப் பாதையை நோக்கிச் செல்லும் விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு புதுவை அரசு இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காததை கண்டிப்பது.

    சட்டவிரோதமாக பதியப்பட்ட புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இத்தகைய முறைகேடு களுக்கு துணை போன முன்னாள் மற்றும் இந்நாள் இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு அனைத்தையும் புதுச்சேரியை சேர்ந்தவர்க ளுக்கு ஒதுக்க வேண் டும். வெளி மாநில விளையாட்டு வீரர்களை கொண்டு விளையாட்டுப் போட்டி களை நடத்தி வரும் விளையாட்டு சங்கங்களின் அங்கீகா ரங்களை ரத்து செய்ய வேண்டும்.

    அனைத்து மாநிலம் மற்றும் தேசிய போட் டிகளில் முழுவதும் புதுவை மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கிட அரசுதகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றாமல் புதுச்சேரி அரசு புறக்கணித்தால் தொடர் போராட்டம் நடத்துவது. என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    முடிவில் செந்தில்வேல் நன்றி கூறினார்.

    Next Story
    ×