என் மலர்
புதுச்சேரி

சாலையோரம் சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்யும் காட்சி.
சாலையோரம் கடை வைத்து வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள்
- புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை
- பழங்கள், கீரைகள் இதர உணவு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனையில் அப்பகுதியை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் இதர உணவு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் அவர்களுக்கு ஓரளவிற்கு லாபம் ஈட்டினாலும், தற்போது தரைக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய இடம் இல்லாமல் பாதிப்பு அடைந்துள்ளனர்.
சென்னை - நாகப்–பட்டினம் 4 வழிச்சாலை விரிவாக்க பணி கடந்த ஒரு வருட காலமாக முழு வீட்டில் நடைபெற்று வருகின்றது.
இதனால் புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த கடைகள் வணிக வளாகங்கள், சாலையோரக் கடைகள் அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறு, குறு விவசாயிகள் தங்களது விலை பொருட்களை சாலையோரம் தரை கடைகள் அமைத்து விற்பனை செய்து வந்தனர்.
தற்போது இவர்களை சாலை போடும் அதிகாரிகள் அகற்றி சாலை போடும் பணியை துரிதப்படுத்தி உள்ளார்கள். இதனால் தினந்தோறும் விளைவிக்கும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய இடம் இல்லாமலும், விளைவித்த பொருள்கள் அழுகிய நிலையில் தூக்கி வீசி மிகுந்த நஷ்டத்தில் சிறு, குறு விவசாயிகள் உள்ளனர்.
இதனால் வியாபாரி–களுக்கும், பொருள்களை வாங்க வரும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத தன்மையை உருவாக்கி உள்ளது. இந்த கடைகளின் வழி–யாக அதிகப்படியான வாகனங்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த விவசாயி–கள் கூறும்போது, தங்களுக்கு உழவர் சந்தை தேவை என்றும், அரசு எங்களுக்கு உடனடியாக இப்பகுதியை பார்வையிட்டு உழவர் சந்தையை கட்டித்தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த திருவண்டார் கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், காலையும், மாலையும் போலீசாரை அதிகப்படுத்தி பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் முறைப்படுத்த வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.






