என் மலர்
புதுச்சேரி

சிவனடியார்கள் பக்தர்கள் திருக்கூட்டம் சார்பில் சிவசிந்தனை நடைபயணம் நடைபெற்ற காட்சி.
சிவசிந்தனை நடைபயணம்
- புதுவை ஒருங்கிணைந்த சிவனடியார்கள் பக்தர்கள் திருக்கூட்டம் சார்பில் சிவசிந்தனை நடைபயணம் புதுவை வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலை அடைந்தது.
- அகில பாரத சன்னியாசிகள் சங்க தலைமை சுவாமி ராமாணந்தர் ஆகியோர் கலந்து கொண்டு கொடி யசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை ஒருங்கிணைந்த சிவனடியார்கள் பக்தர்கள் திருக்கூட்டம் சார்பில் சிவசிந்தனை நடைபயணம் புதுவை வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலை அடைந்தது.
இந்த நடைபயணத்தை திருக்கழுகுன்று திரு வாசகசித்தர் தாமேதரன், மணலிப்பட்டு சுத்தவிதாத சீர்வளர்சீர் தேசிக பரமாச்சாரியர் குமாரசாமி, அகில பாரத சன்னியாசிகள் சங்க தலைமை சுவாமி ராமாணந்தர் ஆகியோர் கலந்து கொண்டு கொடி யசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஆதியோகி சந்திரசேகரர் சாமிகள், சிவயோகி டாக்டர் ராஜ்குமார், அருள்வாக்கு சித்தர் எடப்பாடி விநாயகம், மணவெளி சுதாகர், வில்லியனூர் திருகாமீஸ்வரர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர்.
இந்நிகழ்ச்சியினை புதுவை ஒருங்கிணைந்த சிவனடியார்கள் பக்தர்கள் திருக்கூட்டம் நிர்வாகிகளான தலைவர் சேகர், பொதுசெயலாளர் கண்ணன், பொருளாளர் தங்கமணி, துணைத்தலைவர் ஆறுமுகசாமி, சரவணன், சிவசங்கர், செயலாளர் ஞானவேல், ரமணாசங்கர், செல்வகணபதி, சிங்காரம், செயற்குழு உறுப்பினர்கள், சிவசக்தி கிருபா, திருச்சிற்றம்பலம் மூர்த்தி ஆகியோர் செய்து இருந்தனர்.