என் மலர்
புதுச்சேரி

மார்க்கண்டேயர் மடத்தில் சிவராத்திரி விழா நடைபெற்ற காட்சி.
மார்க்கண்டேயர் மடத்தில் சிவராத்திரி விழா
- புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் மடத்தில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
- தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள் ஓதி வந்திருந்த அனைவருக்கும் ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் மடத்தில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
புதுவை ஆதீனம் சாய் சித்தர் சந்திரசேகர சாமிகள் முன்னிலையில் சனி பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி பெரியநாயகி அம்மன் உடனுறை அரசியலீஸ்வரர் பெருமானுக்கு 4 கால பூஜை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றன.
தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள் ஓதி வந்திருந்த அனைவருக்கும் ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் உறுப்பினர்கள் மற்றும் நாகராஜ், ராஜ்குமார், சிவகந்தன், சிவகிரி, சாய்மணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






