என் மலர்
புதுச்சேரி

சமத்துவ பொங்கல் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் பரிசு வழங்கிய காட்சி.
பா.ஜனதா மகளிர் அணியின் சார்பில் பொங்கல் போட்டிகள்
- ஊசுடு தொகுதி பிள்ளையார்குப்பத்தில் தொகுதி பா.ஜனதா மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
- பா.ஜனதா தொகுதி தலைவர் தியாகராஜன், உசுடு தொகுதி துணைத் தலைவர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
ஊசுடு தொகுதி பிள்ளையார்குப்பத்தில் தொகுதி பா.ஜனதா மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தலைமையில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாநில துணைத்தலைவர் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ, மாநில மகளிர் அணி தலைவர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா தொகுதி தலைவர் தியாகராஜன், உசுடு தொகுதி துணைத் தலைவர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் அணி செயலாளர் மீனா வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி மகளிர் அணி தலைவி லட்சுமி, கூடப்பாக்கம் அய்யனார், ஊர் முக்கியஸ்தர்கள் தர்மலிங்கம், சுந்தரமூர்த்தி, சேகர், அச்சுதா, ஆறுமுகம், ஆறுபடையப்பா, சவுரி, தர்மன், பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமத்துவ பொங்கல் விழாவில் பெண்களுக்கான கோலப் போட்டிகள், இசை நாற்காலி, லெமன் ஸ்பூன், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், பலூன் உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மகளிருக்கு அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் யுத்தம் கலை க்குழுவின் தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை பிள்ளை யார்குப்பம் பா.ஜனதா கிளை தலைவர் ஆனந்த் செய்திருந்தார்.






