என் மலர்
புதுச்சேரி
X
ரூ. 7.31 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் வசதி
Byமாலை மலர்24 Oct 2023 11:59 AM IST
- பாஸ்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- 7 லட்சத்து 32 ஆயிரம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தொகுதி செல்வகணபதி நகர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தர அப்பகுதி மக்கள் பாஸ்கர் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை வைத்திரு ந்தனர்.
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கழிவு நீர் வாய்க்கால் ரூ. 7 லட்சத்து 32 ஆயிரம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.
விழாவில் பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணியை பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் சுரேஷ், ஒப்பந்ததாரர் அழகேசன் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X