என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ. 1 கோடியில் சாலை-மதில் சுவர் அமைக்கும் பணி  சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    சாலை மதில் சுவர் அமைக்கும் பணியை சிவா எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

    ரூ. 1 கோடியில் சாலை-மதில் சுவர் அமைக்கும் பணி சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • புதுப்பேட் கிராமத்தில் உள்ள குறுக்கு சாலைகளுக்கு வாய்க்காலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ரூ.41 லட்சம் மதிப்பில் நடைபெற உள்ளது.
    • ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1 கோடியே 13 லட்சத்து 86 ஆயிரத்து 144-க்கான பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பேட் கிராமத்தில் உள்ள குறுக்கு சாலைகளுக்கு வாய்க்காலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ரூ.41 லட்சம் மதிப்பில் நடைபெற உள்ளது.

    இதுபோல் கரையான்பேட் கிராமத்தில் வாய்க்காலுடன் கூடிய உட்புறசாலைகள் அமைக்கும் பணி ரூ.24 லட்சம் மதிப்பிலும், பெரியபேட் கிராமத்தில் இருந்து காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் தார்ச்சாலை அமைக்கும் பணி ரூ.18 லட்சம் மதிப்பீட்டிலும், உத்திரவாகினிபேட் திடலுக்கு சுற்று மதில் சுவர் அமைக்கும் பணி ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1 கோடியே 13 லட்சத்து 86 ஆயிரத்து 144-க்கான பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாட்கோ மேலாண் இயக்குனர் தயாளன், இளநிலை பொறியாளர் திருவரசன், விடுதலை சிறுத்தை கட்சி முதன்மை செயலாளர் தேவ பொழிலன், ம.தி.மு.க. கபிரியேல், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, இளைஞர் அணி தொகுதி அமைப்பாளர் மணிகண்டன், வர்த்தகர் அணி துணை செயலாளர் பழனிசாமி, தொகுதி துணை செயலாளர்கள் அங்காளன், குணேசகரன், கிளை செயலாளர்கள் அரிகிருஷ்ணன், செல்வநாதன், அன்புநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×