என் மலர்
புதுச்சேரி

முத்தியால்பேட்டையில் நடந்த பூமி பூஜை விழாவை அமைச்சர் லட்சுமி நாராயணன், பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.
ரூ.1 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி
- அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார்
- உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறி யாளர் வேல்முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள சாலை வீதி முதல் அதிதி ஓட்டல் வரை சுமார் 1 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ முன்னிலையில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை மூலம் ராஜ்பவன் மற்றும் முத்தியால் பேட்டை தொகுதிக்குட்பட்ட சாலை வீதி முதல் அதிதி ஓட்டல் சந்திப்பு வரை உள்ள 1650 மீட்டர் நீளமுள்ள சாலை சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில் செப்பணிடும் பணியின் துவக்க விழா நடைபெற்றது. முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ் குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் வேல்முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






