என் மலர்
புதுச்சேரி

டெல்லியில் நடந்த மாநாட்டில் மத்திய உணவு துறை அமைச்சர் பியூஸ் கோயலை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் சந்தித்த காட்சி.
புதுவையில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்க வேண்டும்
- டெல்லி மாநாட்டில் அமைச்சர் சாய். ஜெ.சரவணன்குமார் வலியுறுத்தல்
- புதுவை, காரைக்கால்,மாகி,ஏனம் ஆகிய பிராந்தியங்களில் அரிசி வழங்கப்படுவதில்லை.
புதுச்சேரி:
டெல்லியில் மத்திய உணவு துறை அமைச்சர் பியூஸ் கோயில் தலைமையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் தேசிய உணவுத்துறை மாநாடு நடந்தது.
இதில் பங்கேற்று பேசிய புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், புதுச்சேரி யூனியன் பிரதேசம் தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களை ஒட்டியுள்ள பிராந்தியங்கள் ஆகும். தமிழகம், கேரளா,ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதுவை, காரைக்கால்,மாகி,ஏனம் ஆகிய பிராந்தியங்களில் அரிசி வழங்கப்படுவதில்லை.
இது புதுச்சேரி பிராந்திய மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நாம் பா.ஜனதா சார்பில் கடந்த தேர்தலில் வழங்கிய தேர்தல் வாக்குறு திகளில் பொதுமக்களுக்கு நேரடியாக அரிசி வழங்குவதாக உறுதியளித்திருந்தோம். ஆனால் தற்போது அரிசி வழங்காமல் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். விரைவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.






