என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆதிதிராவிட மாணவர்களுக்கு ரூ.22 லட்சம் கல்விக்கடன்-ரங்கசாமி வழங்கினார்
    X

    ஆதிதிராவிட மாணவருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கல்விக்கடன் வழங்கிய காட்சி.

    ஆதிதிராவிட மாணவர்களுக்கு ரூ.22 லட்சம் கல்விக்கடன்-ரங்கசாமி வழங்கினார்

    • புதுவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலைக் கழகத்தின் மூலம் தேசிய கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன்களை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலைக் கழகத்தின் மூலம் தேசிய கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இத்திட்டத்தின் கீழ் பல்வேறு கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் புதுவையை சேர்ந்த 20 ஆதிதிராவிட மாணவ-மாணவிகளுக்கு கல்விக் கடனாக ரூ.22 லட்சத்து 7 ஆயிரத்து 228 கல்விக்கடன் தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அரசு கொறடா ஆறுமுகம், முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலைக் கழக மேலாண் இயக்குநர் தயாளன், துறை இயக்குநர் யஷ்வந்தயா, பொது மேலாளர் ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×