என் மலர்
புதுச்சேரி

நேரு எம்.எல்.ஏ. ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கிய காட்சி.
சுப்புராயப்பிள்ளை நினைவு நாளையொட்டி ஏழைகளுக்கு புத்தாடை
- சின்னா சுப்பராயப்பிள்ளையின் 148-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
- அவரின் நினைவிடத்தில நேரு எம்.எல்.ஏ. மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி:
புதுவை நகராட்சி அறப்பணி அவை சார்பில் சின்னா சுப்பராயப்பிள்ளையின் 148-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
மறைமலை அடிகள் சாலை கென்னடி நகர் சுப்புராயப்பிள்ளை சத்திரத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில நேரு எம்.எல்.ஏ. மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் , புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், சுகாதார அதிகாரி துளசிராமன், பொறுப்பாளர் விஜயலட்சுமி மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






