என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை-திருப்பதி ரெயில் வில்லியனூரில் நிறுத்தம்- கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்
    X

    கோப்பு படம்.

    புதுவை-திருப்பதி ரெயில் வில்லியனூரில் நிறுத்தம்- கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்

    • இந்த ரெயில் புதுவை ரெயில் நிலையத்திலிருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருப்பதி சென்றடையும்.
    • புதுவை, திருப்பதி செல்லும் ரெயில் வில்லியனூரில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதியளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையிலிருந்து திருப்பதிக்கு நாள்தோறும் பயணிகள் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் புதுவை ரெயில் நிலையத்திலிருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருப்பதி சென்றடையும். இந்த ரெயில் வில்லியனூர் ரெயில்நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து கவர்னர் தமிழிசை மத்திய ரெயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தினார். இதையடுத்து புதுவை, திருப்பதி செல்லும் ரெயில் வில்லியனூரில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதியளிக்கப்பட்டது.

    இந்த ரெயில் மதியம் 3.04 மணிக்கு வில்லியனூரில் ஒரு நிமிடம் நின்று 3.05 மணிக்கு புறப்படும். அதேபோல திருப்பதியில் காலை 4.10 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 12.36 மணிக்கு வில்லியனூர் வந்து ஒரு நிமிடம் நின்று 12.37-க்கு புறப்பட்டு புதுவை வந்தடையும்.

    வில்லியனூர் ரெயில்நிலையத்தில் ரெயில் நின்று புறப்படும் விழா இன்று மதியம் 3 மணிக்கு வில்லியனூர் ரெயில் நிலையத்தில் நடந்தது.

    கவர்னர் தமிழிசை, விழாவில் பங்கேற்று கொடியசைத்து வைத்து ரெயில் நிறுத்த சேவையை தொடங்கி வைத்தார்.

    விழாவில், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×