search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நகர்புறத்துக்கு சுத்தமான குடிநீர் கொண்டுவர ஏற்பாடு
    X

    நேரு எம்.எல்.ஏ. தலைமையில் சட்டசபை உறுதி மொழி குழு ஆலோசனைக்கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    நகர்புறத்துக்கு சுத்தமான குடிநீர் கொண்டுவர ஏற்பாடு

    • தலைமை செயலகத்தில் உள்ள ஆலோசனை அரங்கத்தில் நடைபெற்றது.
    • உறுதிமொழிகள் குழு தலைவரான நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டப்பேரவை அரசாங்க உறுதி மொழிகள் குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள ஆலோசனை அரங்கத்தில் நடைபெற்றது.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மேற்பார்வையில் உறுதிமொழிகள் குழு தலைவரான நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை, ஸ்மார்ட் சிட்டி திட்டம், மற்றும் திட்ட அமலாக முகமை ஆகிய துறைகளில் முதல்-அமைச்சரும், துறை சார்ந்து அமைச்சர்களும் சட்ட சபையில் அறிவித்த நலத்திட்ட உறுதி மொழி களை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அன்பால் கென்னடி, வி.பி.ராமலிங்கம் ஏ.கே.டி.ஆறுமுகம், அசோக்பாபு, சிவசங்கரன், அரசு செயலர் மணிகண்டன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் மற்றும் அரசுத்துறை இயக்குனர்கள், அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சட்டசபையில் அளித்த உறுதிமொழி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் கிராமப் பகுதியில் இருந்து நகர்ப்புறங்களுக்கு சுத்தமான குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை விரைவில் செயல்படுத்துவது குறித்தும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள் மற்றும் புதிய பஸ் நிலையம், பெரிய மார்க்கெட், போன்ற மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியமான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    Next Story
    ×