search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வழிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும்-நாஜிம் எல்.எல்.ஏ. கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    வழிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும்-நாஜிம் எல்.எல்.ஏ. கோரிக்கை

    • புதுவை மாநிலத்தில் தி.மு.க., ஆட்சி காலத் தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி அறிமுகப்படுத்தப்பட்டு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் சாலை மற்றும் சாக்கடை வசதி செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் எல்.எல்.ஏ நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் தி.மு.க., ஆட்சி காலத் தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி அறிமுகப்படுத்தப்பட்டு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது படிப்படியாக உயர்த்தி, தற்போது ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிதியை செலவு செய்ய வழிகாட்டு நெறிமுறையை அரசு வழங்கியுள்ளது.

    அதன்படி தொகுதி மேம்பாட்டு நிதியில் தெரு விளக்குகள் கூட போட அனுமதிக்க முடியாத நிலை உள்ளது. ஆனால் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி யில் செலவு செய்வதில் சிக்கல் இல்லை. பள்ளிகளுக்கு பெஞ்ச் நாற்காலி, குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் போன்றவற்றை எம். பி., நிதியில் பெறமுடியும்.

    எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் சாலை மற்றும் சாக்கடை வசதி செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சபா நாயகரை சந்தித்து

    எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதிக்கான வழி ப்முறைகளை பின்பற்றி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கான வழிமுறை களை மாற்றியமைக்க கோரினோம். சபாநாயகர் மனு தருமாறு கூறியுள்ளார். மனு வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×