என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் மோதல்
- புதுவை பி.ஆர்.டி.சி. ஊழியர்களிடையே மோதல் ஏற்பட்டது.
- வில்லியனூர் மெயின் ரோடு நாதன் நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது54). இவர் புதுவை சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) டிக்கெட் புக்கிங் கவுண்டரில் வேலை செய்து வருகிறார்.
புதுச்சேரி:
வில்லியனூர் மெயின் ரோடு நாதன் நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது54). இவர் புதுவை சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) டிக்கெட் புக்கிங் கவுண்டரில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நடராஜன் டிக்கெட் புக்கிங் பணிகளை முடித்து கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது பி.ஆர்.டிசி.யில் டிரைவராக பணிபுரியும் மோகன்ராஜ் என்பவர் தன்னுடன் ஒருவரை அழைத்து வந்து தனக்கு பெங்களூர் செல்ல 2 டோக்கன் வேண்டும் என கேட்டார்.
அதற்கு நடராஜன் கணக்கை முடித்து விட்டதாக தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி, நடராஜன் கணக்கு முடித்து வைத்திருந்த பணத்தை பறித்து கீழே வீசினார்.
மேலும் நடராஜனை நெட்டி தள்ளி மார்பில் கையால் தாக்கினார். இதையடுத்து நடராஜன் தனது மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






