என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு பாதயாத்திரை
- லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலுக்கு பாதயாத்திரை நடைபெறும்.
- ஆன்மிக சொற்பொழிவை பஞ்சமுக ஆஞ்சநேய பக்தசபா கோசகன் பட்டாச்சாரியார் தொடங்கி வைக்கிறார்.
புதுச்சேரி:
லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலுக்கு பாதயாத்திரை நடைபெறும்.
அதுபோல் வருகிற 8-ந் தேதி 26-ம் ஆண்டு பாதயாத்திரை நடைபெற உள்ளது. அன்றைய 6 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் பாதயாத்திரையை திருக்கோவிலூர் ஸ்ரீமத் ஜீயர் சுவாமிகள் மங்கள சாசனத்துடன் தொடங்கி வைக்கிறார்.
யாத்திரையில் தமிழகம், புதுவையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பஜனை குழுக்களும், திருமால் அடியார்களும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்மிக பக்தர்களும் கலந்து கொள்கின்றனர்.
யாத்திரை புதுவை- கடலூர் சாலை வழியாக அபிஷேகபாக்கம், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலை சென்றடைகிறது.
தொடர்ந்து கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. 8 மணி முதல் 2 மணி வரை லட்சுமி நரசிம்மருக்கு பூஜிக்கப்பட்ட பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
முன்னதாக 7-ந் தேதி 6 மணிக்கு வைசியாள்வீதி வாசவி திருமண மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. ஆன்மிக சொற்பொழிவை பஞ்சமுக ஆஞ்சநேய பக்தசபா கோசகன் பட்டாச்சாரியார் தொடங்கி வைக்கிறார். பூவைப் பூவண்ணன் அடி என்ற தலைப்பில் நெய்தல்நாடான் சொற்பொழிவாற்றுகிறார்.
விழா ஏற்பாடுகளை ஆன்மிக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ, பொருளாளர் வாசுதேவன், கவுரவ தலைவர்கள் பூவராகவன், ஜெயப்பிரகாஷ், நிர்வாகிகள் முகுந்தன், ராமமூர்த்தி, விட்டல், சுப்பிரமணியன், கோதண்டராமன், ராஜேஷ், அசோகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.