search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    X

    1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

    1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    • மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல், 75 கி.மீ வேகத்திலும், இடையிடையே 85 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
    • புதுவையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனிடையே, தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் கடந்த 19-ந் தேதி காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இது தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக உருவெடுத்தது.

    மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு தேஜ் அதி தீவிர புயலாக வலுப்பெற்று தென்மேற்கு அரபிக்கடலில் சகோத்ரா நகருக்கு 330 கி.மீ கிழக்கு-தென்மேற்கேயும், சலாலா நகருக்கு 690 கி.மீ தெற்கு-தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா நகருக்கு 720 கி.மீ தென்கிழக்கேயும் மையம் கொண்டு ள்ளது.

    இன்று மதியம் புயல் மேலும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதேபோல் வங்ககடல் பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு மேற்கே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

    இது அந்தமான் தீவுகள் போரட் பிளேயருக்கு வடக்கு வடமேற்கில் சுமார் 110 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுக்கு தென்-தென்கிழக்கே ஆயிரத்து 460 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அப்போது மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல், 75 கி.மீ வேகத்திலும், இடையிடையே 85 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் இது புயலாக மாற வாய்ப்புண்டு. இந்த புயலுக்கு ஹாமூன் என பெயரிடப்பட்டுள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து 25-ந் தேதி அதிகாலை டின்கோனா தீவு மற்றம் சாண்ட்விப் இடையே வங்கதேச கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும், மீனவர்கள் யாரும கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

    இந்த நிலையில், புதுவையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் நாளையும், நாளை மறுநாளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×