என் மலர்
புதுச்சேரி

இசை நாட்டிய விழாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மணியடித்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளனர்.
புதுவை கடற்கரையில் இசை நாட்டிய விழா-முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
- புதுவை கடற்கரை சாலையில் நடந்தது. வருகிற 16-ந் தேதி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தஞ்சை தென்னக பண்பாட்டுத்துறை இயக்குனர் பாலகிருஷ்ணன், அரசு செயலர் கேசவன் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு கலை பண்பாட்டுத்துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் இணைந்து இசை நாட்டிய விழா, சிறுவர் இசை நாட்டிய விழா, அவ்வையார் விழா, சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா ஆகியவற்றை நடத்துகிறது.
இதன் தொடக்கவிழா புதுவை கடற்கரை சாலையில் நடந்தது. வருகிற 16-ந் தேதி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை நாட்டிய விழா நடக்கிறது. சிறுவர் இசை நாட்டிய விழா வருகிற 6 மற்றும் 7-ந் தேதி நடக்கிறது.
அவ்வையார் விழா வருகிற 9-ந் தேதி நடக்கிறது. சங்கரதாஸ் சுவாமிகள் விழா 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.
தொடக்கவிழாவில் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கந்தன் வரவேற்றார். தஞ்சை தென்னக பண்பாட்டுத்துறை இயக்குனர் பாலகிருஷ்ணன், அரசு செயலர் கேசவன் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி விழாவை மணியடித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து குமார் குழுவினரின் தவில் இசை, கோபக்குமார் குழுவினரின் நாதசங்கமம், ராஜேந்திரன் குழுவினரின் பக்தடஇசை, பிரபு கிராமிய கலைக்குழுவுடன் இசை நிகழ்ச்சி நடந்தது. கண்காணிப்பாளர் அருள்ராசு நன்றி கூறினார்.
புதுவை கடற்கரை சாலையில் நாள்தோறும் இந்த விழாக்கள் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடக்கிறது.






