என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மோடி பிறந்த நாளையொட்டி மருத்துவ முகாம்
    X

    பாரதிய ஜனதா கட்சியின் பண்பாட்டு அமைப்பான வேதபாரதி சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமில் முன்னாள் பாஜக தலைவர் சாமிநாதன் எம்‌.வி.ஆர் மருத்துவ மைய இயக்குனர் டாக்டர் எம்.ஆர் வித்யாவிற்கு நினைவு பரிசு வழங்கிய காட்சி.

    மோடி பிறந்த நாளையொட்டி மருத்துவ முகாம்

    • வேதபாரதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது.
    • மாநிலத் தலைவர், செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்த நாள் சேவை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக பாரத பண்பாட்டு அமைப்பான வேதபாரதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது.

    லாஸ்பேட்டை சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்தார். பா.ஜனதா மாநில முன்னாள் தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். முகாமில் லாஸ்பேட்டை ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள எம்.வி.ஆர் மருத்துவமைய மருத்துவ இயக்குனரும் முதுநிலை பொது மருத்துவம் மற்றும் நீரிழிவுநோய் சிறப்பு நிபுணருமான டாக்டர் எம்.ஆர்.வித்யா தலைமையி லான மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த முகாமில், பொது மற்றும் நீரிழிவுநோய் சிறப்பு மருத்துவம், இருதய நல சிறப்பு மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவ ஆலோசனைகள், ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, ரத்தசோக பரிசோதனை, இ. சி. ஜி., எலும்பு அடர்த்தி கண்டறியும் சிறப்பு ஸ்கேன் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் பா.ஜ.க மாநில செயலாளர் லதாகோபு, உழவர் கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், மாவட்ட துணை தலைவர் முருகன்,தொகுதி தலைவர் சோமசுந்தரம், திருமால், நடராஜன், கனகவள்ளி,வேத பாரதியின் பொது செயலாளர் பட்டாபிராமன், வேதராமன்,ரவிச்சந்திரன், மெடிகல் கிருஷ்ண மூர்த்தி, கல்யாண் குமார்,வெங்க டேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×