search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மதுபான கடைகளை அகற்ற வேண்டும்-கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    மதுபான கடைகளை அகற்ற வேண்டும்-கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • ஆலங்குப்பம் பகுதியில் தேசிய மூங்கில் வளர்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • விளையாட்டு கவுன்சிலில் பணியாற்றும் பயிற்சியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசியதாவது:-

    ஆலங்குப்பம் பகுதியில் தேசிய மூங்கில் வளர்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்தாண்டு நடைபெறாத மலர் கண்காட்சியை இந்த ஆண்டு நடத்த வேண்டும். பிரதமர் 8 ஆண்டுகாலமாக ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்து வருகிறார்.

    இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தந்துள்ளது. அதனால் தான் அடுத்த முறையும் மோடிதான் பிரதமர் என ஆணித்தரமாக கூறுகிறோம்.

    விளையாட்டு துறையை தனி துறையாக மாற்றியதற்கு நன்றி. கடந்த 5 ஆண்டுகளாக விளையாட்டு வீரர்கள் ஊக்குவிக்கப்படவில்லை. புதுவையில் அதிகாரிகள் சரியில்லை. விளையாட்டு கவுன்சிலில் பணியாற்றும் பயிற்சியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

    அனைத்து பள்ளிகளிலும் உள்கட்டமைப்பை செய்து தர வேண்டும். எனது தொகுதியில் உள்ள மகளிர் தொழில்நுட்ப கல்லூரியை பொறியியல் கல்லூரியாக மாற்றியதற்கு நன்றி. பெரிய காலாப்பட்டில் தேசிய சட்ட பல்கலைக் கழகம் அமைக்க 25 ஏக்கர் விவசாய நிலத்தை கொடுத்துள்ளோம்.

    நிலம் கொடுத் தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். உயர் கோபுர மின் விளக்குகளை சீரமைத்து தர வேண்டும். எனது தொகுதியில் தூண்டில் முள் வளைவு அமைத்துத் தர வேண்டும். ஆலங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் சிகிச்சை அளிக்க மருத்துவரை நியமிக்க வேண்டும்.

    ஆலங்குப்பம் பகுதியில் 4 மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி செல்லும் மாணவர்களின் பெற்றோர்கள் அவதிப் படுகின்றனர். மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்தும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. தண்டனை முடித்தும் சிறையில் 27 கைதிகள் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×