என் மலர்
புதுச்சேரி

தவளக்குப்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடந்த காட்சி.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மக்கள் சந்திப்பு பிரச்சாரம்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தவளக்குப்பம் 4முனை சந்திப்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
- இந்த பிரச்சாரத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
மின் துறையை தனியார்மயப்படுத்தும் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தவளக்குப்பம் 4முனை சந்திப்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த பிரச்சாரத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். கட்சியின் மேலிட பொறுப்பாளரும், மாநில பொருளாளருமான தமிழ்மாறன், மாநில செயலாளர் தமிழ்வளவன் ஆகியோர் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தவளக்குப்பம் கடைவீதியில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கி விடுதலைச் சிறுத்தை கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பிரச்சாரத்தில் மணவெளி, ஏம்பலம், பாகூர் ஆகிய தொகுதிகளை சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் கலைமணி, வக்கீல் செந்தமிழன், பாண்டியன், கவியரசன், வினோத், ராஜா, சிவகுரு, வீரமணி, சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






