என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் லட்சதீபம்
    X

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்ட காட்சி.

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் லட்சதீபம்

    • கோகிலாம் பிகையுடன் திருக்காமீசுவரர் சாமி கோவில் உள் புறப்பாடு செய்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
    • திரபுரசுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில் சாமி உள் புறப்பாடு நடைபெற்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் வரலாற்று புகழ்மிக்க திருக்காமீசுவரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் கார்த்திகை தீப விழா விமர்சையாக நடந்தது.

    கோவில் கோபுரத்தில் தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோவில் வளாகம் முழுவதும் திரளான பக்தர்கள் ஒரு லட்சம் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக கோகிலாம் பிகையுடன் திருக்காமீசுவரர் சாமி கோவில் உள் புறப்பாடு செய்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இதே போல் காந்தி வீதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து திரபுரசுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில் சாமி உள் புறப்பாடு நடைபெற்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    Next Story
    ×