என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
நிதி வரவை தெரிந்தும் அரசியலுக்காக சிலர் அரசு மீது குற்றஞ்சாட்டுகின்றனர்
- முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சு
- சில மாதங்களில் தமிழ் மாமணி விருதும் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும்.
புதுச்சேரி:
கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
பல ஆண்டுகளுக்கு பிறகு கலைமாமணி விருது வழங்கும் விழா மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் விடுப்பட்ட அனைத்து திட்டங்களையும் செய்வதோடு அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் செய்து முடிக்கும்.
மத்திய அரசு தேவையான அளவு நிதி ஆதாரங்களை வழங்குகிறது. ஆனால் இதனை தெரிந்தும் சிலர் அரசு மீது அரசியலுக்காக குற்றஞ்சாடி வருகின்றனர். தமிழ் அறிஞர்கள், பாவலர்கள், புலவர்கள், கவிஞர்கள் மட்டுமின்றி மேடை பேச்சாளர்களுக்கும் வருகின்ற ஆண்டு முதல் கலைமாமணி விருது வழங்கப்படும்.
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ் மாமணி விருதும் அறிவிக்க ப்பட்டு வழங்கப்படும். இவ்வாறுஅவர் பேசினார்.
Next Story






