என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இலவசம் அறிவித்து ஓட்டு வாங்க நினைப்பது தவறான செயல்-அங்காளன் எம்.எல்.ஏ. வேதனை
    X

    கோப்பு படம்.

    இலவசம் அறிவித்து ஓட்டு வாங்க நினைப்பது தவறான செயல்-அங்காளன் எம்.எல்.ஏ. வேதனை

    • கடந்த பட்ஜெட்டில் அறிவித்த எதுவும் நிறைவேற்றவில்லை.
    • கடந்த பட்ஜெட்டில் 5 சதவீதம்கூட நிறைவேற்றவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் பேசியதாவது:-

    சர்க்கரை என எழுதி சுவைத்து பார்த்தால் இனிக்குமா? அதுபோலத்தான் கடந்த பட்ஜெட்டில் அறிவித்த எதுவும் நிறைவேற்றவில்லை. கடந்த பட்ஜெட்டில் 5 சதவீதம்கூட நிறைவேற்றவில்லை. 4 ஆண்டாக ரேஷன்கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. ஸ்பின்கோ ஆலை மூடப்பட்டுள்ளது.

    பள்ளி மாணவர்கள் மீதானஅக்கறையை கஞ்சாவை ஒழிப்பதில் காட்டினாலே போதும். பள்ளிகளில் கழிப்பறை, மைதானம், ஸ்மார்ட் வகுப்பு தேவை. காமராஜர் கலைக் கல்லூரியில் பட்டமேற்படிப்பு தொடங்க வேண்டும். கிராம பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. திருபுவனையில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.

    பொதுப்பணித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி ஆறு, குளங்களை தூர்வார வேண்டும். தொடர் நோய் உள்ளவர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். இலவசம் மூலம் மக்களை திருப்திப்படுத்தி ஓட்டு வாங்க வேண்டும் என நினைப்பது தவறான செயலாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×