search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாண்லே பால் பொருட்கள் விற்பனை நிலையம் மூடி கிடக்கும்  அவலம்
    X

    திருபுவனையில் உள்ள பாண்லே பால் பொருட்கள் விற்பனை நிலையம் மூடி கிடக்கும் காட்சி.

    பாண்லே பால் பொருட்கள் விற்பனை நிலையம் மூடி கிடக்கும் அவலம்

    • பொதுமக்கள் அவதி
    • அதிகாரிகள் பார்வையிட்டு பால் விற்பனையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை இந்திரா நகர் எதிரில் பாண்லே நிறுவனத்தின் மூலம் பால் பொருட்கள் விற்பனை நிலையம் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

    இங்கு பொது மக்களுக்கு தேவையான பால், நெய், தயிர், பாதாம்பால், பால்கோவா, மோர், ரொட்டி கேக்குகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்து வந்தனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் இருந்த இந்த விற்பனை நிலையத்தில் தினந்தோறும் அதிகப்படியான வருவாயை கொடுத்து அதிக அளவில் பால் பொருட்கள் விற்பனையும் ஆனது.

    இந்நிலையில் 4 வழி சாலை அமைக்கும் பணிக்காக பாண்லே விற்பனை நிலையம் சாலையின் ஓரத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டது.

    அதன் பின்பு கடந்த 6 மாத காலமாக ஒரு சில காரணத்தினால் பாண்லே விற்பனை நிலையம் முழுவதுமாக மூடப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், பால் மொத்த விற்பனை யாளர்கள், டீக்கடைக் காரர்கள், ஓட்டல் கடைக்காரர்கள், உள்ளிட் டோர் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

    தற்போது மூடி உள்ள இந்த பாண்லே பால் விற்பனை நிலையத்தை அதிகாரிகள் பார்வையிட்டு பால் விற்பனையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×