என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தில் பயிற்சி
    X

    ஆஸ்திரேலியா மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவர்கள் பயிற்சி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான போது எடுத்த படம்.

    புதுவை மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தில் பயிற்சி

    • புதுவை ராஜீவ்காந்தி அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் துணையோடு எதிர்கால ஆராய்ச்சிகளுக்காக வழிமுறைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • புதுவை மாணவர்கள் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பை தொடர்வதற்கு சாத்தியக்கூறுகளையும் அதற்கான வழிமுறைகளையும் விளக்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை ராஜீவ்காந்தி அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் துணையோடு எதிர்கால ஆராய்ச்சிகளுக்காக வழிமுறைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மெல்போர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜியோ வாணி தர்சினி, டாக்டர் சுரீந்தர் சிங் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். புதுவை மாணவர்கள் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பை தொடர்வதற்கு சாத்தியக்கூறுகளையும் அதற்கான வழிமுறைகளையும் விளக்கினர்.

    மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    கல்லூரி முதல்வர் டாக்டர் செழியன் கல்லூரியின் எதிர்கால திட்டம் மற்றும் ஆராய்ச்சிகளை மெல்போர்ன் பல்கலையுடன் இணைந்து செய்லாற்றுவது குறித்து பேசினார்.

    தொடர்ந்து, மெல்போர்ன் பல்கலைக்கழக பேராசிரி–யர்கள் மேட்டுப்பாளையம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

    Next Story
    ×