என் மலர்
புதுச்சேரி

நேஷனல் ஆங்கில உயர்நிலை பள்ளியில் சர்வதேச யோகா தினவிழா நடைபெற்ற காட்சி.
நேஷனல் ஆங்கில உயர்நிலை பள்ளியில் சர்வதேச யோகா தினவிழா
- மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு விதமான யோகா பயிற்சினை செய்தனர்.
- யோகா ஆசிரியர் செந்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விழாவை சிறப்பித்தார்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் சார்பில் சர்வதேச யோகா தினவிழா நிகழ்ச்சி புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு விதமான யோகா பயிற்சினை செய்
தனர். நிகழ்ச்சியை பள்ளியின் மேலாண் இயக்குநர் கிரண்குமார் தொடங்கி வைத்தார். பள்ளியின் தாளாளர் எழிலரசி மற்றும் தலைமை ஆசிரியை உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
யோகா ஆசிரியர் செந்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விழாவை சிறப்பித்தார். ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் செய்தனர்.
Next Story






