search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை அறை திறப்பு
    X

    பக்தர்கள் கூட்டு தியானத்தில் ஈடுபட்ட காட்சி.

    அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை அறை திறப்பு

    • மீரா அல்பாசா 1878-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்.
    • அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரை உருவாக்கினார்.

    புதுச்சேரி:

    பக்தர்களால் அன்னை என அழைக்கப்படும் மீரா அல்பாசா 1878-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்.

    மகான் அரவிந்தரின் யோக முறைகள் கவர்ந்ததால் இந்தியாவுக்கு வந்தார். அரவிந்தர் வாழ்ந்த புதுவையிலேயே தங்கி அவரின் ஆன்மிக பணிகளுக்கு துணையாக இருந்தார். அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரை உருவாக்கினார்.

    அன்னை 1973-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதி மகா சமாதியடைந்தார். அன்னையின் 50-ம் ஆண்டு மகா சமாதி தினம் இன்று அரவிந்தர் ஆசிரமத்தில் அனுசரிக்கப்பட்டது.

    இதனையொட்டி இன்று காலையில் கூட்டு தியானம் நடந்தது. காலை 6 முதல் மதியம் 12 மணி வரை அன்னை வாழ்ந்த அறை, அவர் பயன்படுத்திய பொருட்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டிருந்தது.

    பல நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அன்னை சமாதியை தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×