என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றினால் வாகன அனுமதி ரத்து
- போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
- ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பர்மிட் நிபந்தனைகளை மீறிய தற்காக வாகன அனுமதி இடை நிறுத்தப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்துத்துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை புஸ்சி வீதியில் பஸ், ஆட்டோ மோதிய விபத்தில் 2 சிறுமிகள் படுகாயமடைந்தனர். ஆட்டோவில் இருக்கை அளவை விட அதிக மாணவர்கள் ஏற்றப்பட்டுள்ளனர். போக்குவரத்துத்துறை பர்மிட் வழங்கும்போது வாகன இருக்கை அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.
3 சக்கர வாகனங்களில் ஓட்டுநர் உட்பட 4 பேர் பயணிக்க அனுமதிக்க ப்படுகிறது. பள்ளி சிறு வர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோ மற்றும் பிற போக்குவரத்து வாகனங்களின் உரிமை யாளர்கள் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பதிவு செய்யப்பட்ட இருக்கையின் ஒன்றரை மடங்கிற்கு மேல் ஏற்றக்கூடாது. அதாவது ஆட்டோவில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் எனில் 5 பேரும், 12 வயதுக்கு மேற்பட்டவர் எனில் 3 பேர் மட்டுமே ஏற்ற வேண்டும்.
பதிவு செய்த இருக்கை களை விட அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் போக்கு வரத்து வாகனம் ஓட்டுபவர், காரணமானவர் அல்லது அனுமதிப்பவர் சட்ட ப்படி தண்டிக்கப்படுவர். ஒவ்வொரு அதிக பயணிகளுக்கும் ரூ.200, பர்மிட் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பர்மிட் நிபந்தனைகளை மீறிய தற்காக வாகன அனுமதி இடை நிறுத்தப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.
போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் பர்மிட் வைத்திருப்போர் அனு மதித்த அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டாம். தவறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






