என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இளைஞர்களுக்கு சிறுதானியம் அரைக்கும் எந்திரம்
    X

    இளைஞர்களுக்கு சிறுதானியம் அரைக்கும் எந்திரம் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கிய காட்சி.

    இளைஞர்களுக்கு சிறுதானியம் அரைக்கும் எந்திரம்

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்
    • வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் சிவசுப்பிரமணியன் மற்றும் கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் இந்திய வேளாண் அறிவியல் கழகம் சார்பில் இளைஞர்களை விவசாயத்தில் தக்க வைக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் ஆர்யா என்ற திட்டம் பெருந்தலைவர் காமராஜ் வேளாண் அறிவியல் நிலையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் ஒரு பகுதியாக இன்று பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு முட்டை பொரிப்பான் மற்றும் சிறுதானியம் அரைக்கும் எந்திரம் ஆகியவற்றை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்.

    இதன் பிறகு இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அவர்களை ஊக்கப்படுத்தி அரசு அளிக்கும் மற்ற திட்டங்களிலும் பயன்பெற்று விவசாயத்தை நீடித்து செயல்படுமாறு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் சிவசுப்பிரமணியன் மற்றும் கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், ஆகியோர் வாழ்த்தி பேசினர். வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் நரசிம்மன், சித்ரா, அமலோர்பவநாதன், பிரபு பொம்மி, சந்திராதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×